செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வ.உ.சி. பேரவை மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பு, நாட்டுப்பற்று மற்றும் தூத்துக்குடி துறைமுக வரலாற்றில் அவரது முக்கிய பங்கு ஆகியவை நினைவுகூரப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வ.உ.சி. பேரவை நிர்வாகிகள், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தினர்