தூத்துக்குடி, செப்.5:
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு வ.உ.சி. பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தினர்.