Advertisement

Share On
District News

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பிறந்தநாள்: தூத்துக்குடியில் சிவன், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

Admin 1 month ago தூத்துக்குடி
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அபிநயா கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தூத்துக்குடியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி, ஜூலை 18:

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாள் சனிக்கிழமை (ஜூலை 18) தூத்துக்குடியில் சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அபிநயா கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தூத்துக்குடியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களின் உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து சிறக்க வேண்டி சிறப்பு அர்ச்சனை செய்து பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளை நடத்த, தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பின்னர், கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களின் பிறந்தநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, நகர மற்றும் பகுதி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பெண்கள் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

ரீல்ஸ் அரசியலை விட்டுவிட்டு ரியாலிட்டி அரசியலுக்கு வாருங்கள்” பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

13 hours ago

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் 1,800 ஏக்கர் நில எடுப்பை நிறுத்துக; 25 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக! உப்பளத் தொழிலை பாதுகாக்க வேண்டும்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் – மத்திய மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான ஏ.எஸ். லாரன்ஸ் வலியுறுத்தல்

3 weeks ago

பனை மேம்பாட்டு கழகம் அமைக்கும் அறிவிப்பு வரவேற்பு: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு டாக்டர் எஸ்.ஜே. கென்னடி பாராட்டு, நன்றி

4 weeks ago

போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

1 month ago

மாணவர்களுக்கு சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்த முடிவு

2 months ago

7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: 4 மணி நேரத்தில் உறவுமுறைச் சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பாராட்டு

2 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்