Advertisement

Share On
District News

7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: 4 மணி நேரத்தில் உறவுமுறைச் சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பாராட்டு

Admin 1 hour ago தூத்துக்குடி
கரு. இராஜசேகரன் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்
கோவில்பட்டி, ஜூன் 22:

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்த 7 மாத குழந்தைக்கு தேவையான உறவுமுறைச் சான்றிதழை வெறும் 4 மணி நேரத்தில் வழங்கி துரித நடவடிக்கை எடுத்த எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 மாத குழந்தை, கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைக்கு சென்னை மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறவுமுறைச் சான்றிதழை சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெற்றுவருமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து குழந்தையின் குடும்பத்தினர் சமூக வலைதளம் மூலம் கோவில்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கரு. இராஜசேகரனைத் தொடர்புகொண்டனர். அவர் தனது நண்பரும் சமூகச் செயற்பாட்டாளருமான கப்பிகுளம் பாபுவுடன் இணைந்து, மனுதாரரை அழைத்துக்கொண்டு எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினர்.

குழந்தையின் மருத்துவ அவசரத் தேவையை அறிந்த வட்டாட்சியர் சுபா, உடனடியாக சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, தேவையான விசாரணை மற்றும் பரிந்துரை அறிக்கைகளை விரைந்து பெற நடவடிக்கை எடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் டி. சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் வெளிப்பணியில் இருந்த நிலையிலும், மாற்று அலுவலரை நியமித்து உறவுமுறைச் சான்றிதழைத் தயாரிக்க ஏற்பாடு செய்த வட்டாட்சியர், அலுவலக நேரம் முடிவதற்கு முன்பாகவே சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்தார்.

பொதுமக்கள் பல்வேறு அலுவலகங்களில் சான்றிதழ்களுக்காக அலைக்கழிக்கப்படும் சூழலில், மருத்துவ அவசரத் தேவையை உணர்ந்து மனிதநேயத்துடன் செயல்பட்ட எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் சேவைக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சேவைக்காக வட்டாட்சியருக்கு கரு. இராஜசேகரன் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: வித லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

3 days ago

மகனை மண்வெட்டியால் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் –II தீர்ப்பு

4 months ago

அ ம மு க மற்றும் மாற்று கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டோர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

4 months ago

39-வது வார்டு பகுதி சபா கூட்டம் – தெப்பத் திருவிழா நடத்த பொதுப்பணித்துறை ஸ்டெபிலிட்டி சர்டிபிகேட் அளித்தால் திருவிழா நடைபெறும் மேயர் ஜெகன் பெரியசாமி.

4 months ago

திருச்செந்தூருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை தேவை - பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை

4 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்