இதன் தொடர்ச்சியாக, இன்று தூத்துக்குடி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணிக்கராஜா முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களும் மற்றும் மாற்றுக் கட்சி சேர்ந்தவர்களும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.
புதியதாக இணைந்தவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து அமைச்சர் கீதா ஜீவன் உற்சாகமாக வரவேற்றார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.