Advertisement

Share On
District News

ரீல்ஸ் அரசியலை விட்டுவிட்டு ரியாலிட்டி அரசியலுக்கு வாருங்கள்” பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

Admin 12 hours ago தூத்துக்குடி
பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிங்கப் பெண்’ சிறப்புப் படையின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி, செப்.2: 

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, ‘ரீல்ஸ் மாடல்’ விளம்பரத்தில் கவனம் செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதற்கு அண்மையில் நடைபெற்ற சம்பவங்களே சாட்சியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பணியிடத்திலேயே பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், இச்சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் தொடர்புடையதாகக் கூறப்படுவது காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாகவும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும், நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் இளம்பெண் ஒருவரை கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு நகைகளை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவமும், வள்ளியூர் அருகே வடக்கன்குளம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவமும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிங்கப் பெண்’ சிறப்புப் படையின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் அச்சத்தில் வாழும் நிலையில், அந்தப் படையின் செயல்பாடு எங்கே என்றும், குற்றங்கள் தொடரும்போது அரசின் கண்காணிப்பும் நடவடிக்கையும் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கேமரா முன்பு ரீல்ஸ் எடுப்பதால் மட்டும் ஆட்சி நடத்திவிட முடியாது. மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் காப்பதே உண்மையான ஆட்சியின் அளவுகோல்” என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

‘வெற்றி மாடல்’ என விளம்பரம் செய்வதை விடுத்து, தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு நிலைநாட்டி முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ரீல்ஸ் அரசியலை விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு வாருங்கள்” என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் 1,800 ஏக்கர் நில எடுப்பை நிறுத்துக; 25 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக! உப்பளத் தொழிலை பாதுகாக்க வேண்டும்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் – மத்திய மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான ஏ.எஸ். லாரன்ஸ் வலியுறுத்தல்

3 weeks ago

பனை மேம்பாட்டு கழகம் அமைக்கும் அறிவிப்பு வரவேற்பு: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு டாக்டர் எஸ்.ஜே. கென்னடி பாராட்டு, நன்றி

4 weeks ago

போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

1 month ago

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பிறந்தநாள்: தூத்துக்குடியில் சிவன், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

1 month ago

மாணவர்களுக்கு சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்த முடிவு

2 months ago

7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: 4 மணி நேரத்தில் உறவுமுறைச் சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பாராட்டு

2 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்