Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

கோவில்களில் மொபைல் போன் தடை விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

Admin 15 hours ago தூத்துக்குடி
நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகள் எளிமையாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும்
சென்னை, செப்.2: கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாகவும் வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகள் எளிமையாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும். மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்காகவே கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, “மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக” மாறிவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழக அரசு கோவில்களில் மொபைல் போன் தொடர்பான இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும்.

கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும், இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும்; பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக மாறக்கூடாது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கூட்டுறவுத்துறை மேற்பார்வையாளர் இல்லாததால் பொதுமக்கள் சேவை பெறுவதில் தாமதம்

21 hours ago

தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

1 day ago

மன்னன் பூலித்தேவன் 311-வது பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில் கீதாஜீவன் புகழ் வணக்கம்

1 day ago

பசுவந்தனை ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

2 days ago

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு: தூத்துக்குடியில் தீர்மானம்

1 week ago

தூத்துக்குடி உப்பளங்கள் கையகப்படுத்துதலைக் கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தல்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்