Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

Admin 21 hours ago தூத்துக்குடி
திறப்பு விழாவிற்கு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமை வகித்தார்
தூத்துக்குடி, செப். 1:

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.பி.ஆர். நகர் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ சண்முகையாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

புதிய ரேஷன் கடையை, தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த புதிய ரேஷன் கடை செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், ஆர்.எஸ்.பி.ஆர். நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை எளிதாகவும், வசதியாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திறப்பு விழாவிற்கு ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ் பாலன், தொமுச நிர்வாகிகள் முத்துராஜ், பால்ராஜ், செல்வராஜ், முத்துமணி, இ.பி. செல்வராஜ், வீரப்பன், சண்முகவேல், ராஜாமணி, பி.எஸ்.என்.எல். சண்முகையா, பாலசுப்பிரமணியன், மதி பிரகாஷ், ஜி. பாலசுப்பிரமணியன், ஜவஹர், முகமது நூர்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

மன்னன் பூலித்தேவன் 311-வது பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில் கீதாஜீவன் புகழ் வணக்கம்

23 hours ago

பசுவந்தனை ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

1 day ago

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு: தூத்துக்குடியில் தீர்மானம்

1 week ago

தூத்துக்குடி உப்பளங்கள் கையகப்படுத்துதலைக் கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தல்

1 week ago

இளம் தலைமுறையினரை பாதுகாக்க அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ஸ்ரீநாத்

1 week ago

உப்பளங்களை பாதுகாக்க கோரிக்கை: தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சந்திப்பு

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்