Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு: தூத்துக்குடியில் தீர்மானம்

Admin 14 hours ago தூத்துக்குடி
பிரதமர் கிஷான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
தூத்துக்குடி, ஆக.25:

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு விவசாய அணி மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகளின் நலன், மத்திய-மாநில அரசுகளின் வேளாண்மை சார்ந்த திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு ஆதரவு

விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்ந்த தகவல்கள் மற்றும் அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு ஆதரவு தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்திட்டத்துக்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் பெற முடியும். மேலும், அலுவலர்கள் நேரடியாக வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து, அரசு திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, அலுவலர்களின் கிராமப்புற களப்பணிகள் மற்றும் விவசாயிகள் சந்திப்புகளை கண்காணிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் UATT 2.0 அமைப்பை எதிர்ப்பதற்குப் பதிலாக, நடைமுறை ரீதியாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவற்றை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

பிரதமர் கிஷான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை முன்னிட்டு, பிரதமரின் கிஷான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளை கண்டறிந்து, அவர்களை திட்டத்தில் இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடத்துவது என இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் தகுதியுடைய எந்த விவசாயியும் அரசின் நிதியுதவியை தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், கிராமப்புறங்களில் விவசாய அணி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பா.ஜ.க. விவசாய அணி சார்பில் ஒருவர் தவறாமல் கலந்து கொள்வது என மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த குறைகளை பதிவு செய்து, அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் விவசாய அணி துணைத் தலைவர்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மண்டல் தலைவர்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாய அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

கூட்டத்தில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் விவசாயிகள் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவிகள் தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும். இதற்காக கட்சி நிர்வாகிகள் கிராமப்புறங்களில் தீவிரமாக பணியாற்றி, விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்கள் கையகப்படுத்துதலைக் கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தல்

1 day ago

இளம் தலைமுறையினரை பாதுகாக்க அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ஸ்ரீநாத்

2 days ago

உப்பளங்களை பாதுகாக்க கோரிக்கை: தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சந்திப்பு

4 days ago

தூத்துக்குடியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

1 week ago

உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த முள்ளக்காடு மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்; கூட்டத்தில் பரபரப்பு

1 week ago

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா: காந்தி சிலைக்கு எம். சகாயராஜ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்