Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த முள்ளக்காடு மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்; கூட்டத்தில் பரபரப்பு

Admin 17 hours ago தூத்துக்குடி
உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் கூட்டத்தில் சலசலப்பு
தூத்துக்குடி, ஆக.16:

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு ஊராட்சியில் நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரஞ்சித் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா, முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் விஜயகாண்டீபன், யூனியன் பற்றாளர் அருண்கார்த்திக் பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் வரவேற்று, அரசின் திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை வாசிக்கத் தொடங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற கோவளம், பசுவந்தனை, தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர், சின்னராஜ், பாலசுப்ரமணியன், சிவாகர், பாஸ்கர், பிரபாகர், காசி, பாரத் உள்ளிட்டோர், வியாபாரிகள் சங்கத் தலைவர் சின்னதங்கம், கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்க நிறுவனத் தலைவர் கராத்தே கோகுல் மற்றும் ஊர் பொதுமக்கள், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் முனியசாமி, முருகன், ஜோதிபாசு, பாஸ்கர் உள்ளிட்டோர் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதனை முள்ளக்காடு உப்பளப் பகுதியில் அமைக்காமல் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். உப்பளங்கள் பாதிக்கப்படாத வகையிலும், உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், இந்தக் கோரிக்கையை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இன்றைய கூட்டம் அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சி தொடர்பான கோரிக்கைகளுக்காக நடத்தப்படுவதாகவும், கப்பல் கட்டும் திட்டம் தொடர்பான கோரிக்கையை இக்கூட்டத்தில் தீர்மானமாக வைக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் சலசலப்பு நிலவியதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினர்.

தொடர்ந்து, தங்களது கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்ததாக கூறி, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், “முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை பாதுகாக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகிறோம். கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டத்தால் உப்பளங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களது கோரிக்கை. இதனை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால், எங்களது கோரிக்கையை தீர்மானமாக வைக்க மறுத்ததால் கூட்டத்தை புறக்கணித்துள்ளோம்” என்றனர்.

கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய சம்பவம் முள்ளக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

15 hours ago

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா: காந்தி சிலைக்கு எம். சகாயராஜ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை

1 day ago

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை அவமதித்த தீண்டாமை செயலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம்

2 days ago

மாவட்ட செயலாளராக முதல் முறையாக தூத்துக்குடி வருகை: அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு முதலமைச்சர் விஜய் ஆசியுடன் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன்: அமைச்சர் ஸ்ரீநாத்

2 days ago

தொகுதி மறுவரையறையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் கண்டனப் பேரணி

4 days ago

தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஸ்ரீநாத் முதல்முறையாக தூத்துக்குடி வருகை உற்சாக வரவேற்புக்கு நிர்வாகிகள் ஏற்பாடு

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்