தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் ஸ்ரீநாத் முதல்முறையாக இன்று தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன், பொருளாளர் சிவக்குமார், துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், கவிதா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முருகேஷ், கார்த்திக்ராஜரத்தினம், பெர்க்மான்ஸ் அந்தோணி, மாரியம்மாள், ஷாமினி, இசக்கியம்மாள் (எ) அருணா, சதீஷ்குமார், ஜோசப்துரை ஆனந்த், சித்ரா, ஜனோஜ்குமார் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அமைச்சர் ஸ்ரீநாத் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது