திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி எட்டையபுரம் சாலை ஹவுசிங் போர்டு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ஆர். ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலக்குழு டிடிசி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து, கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு ஆர். ரெங்கசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சரத்பாலா, பால்துரை, கந்தன், முன்னாள் கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், முருகேசன், செல்வராஜ், கண்ணன், பூசாரி முருகன், ஜோசியர் முருகன், எஸ்.ஆர். கணேசன், முத்துராஜ், சேர்மத்துரை, ராஜாமணி, பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
கலைஞர் கருணாநிதியின் சமூகநீதி, தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மரியாதை செலுத்தினர்.