இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் தூத்துக்குடி 1-வது கேட் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழாவை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, மேற்கு மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், புல்டன் ஜெசின், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், ராஜாராம், மாவட்ட செயலாளர் இக்னேசியஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்.சி. துறை பிரபாகரன், மீனவர் காங்கிரஸ் துறை சிமியோன், மாநில பேச்சாளர் பார்த்திபன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஸ் பாபு, முருகன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி இசக்கியம்மாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரியப்பன், செய்யது அலி, கலைப்பிரிவு செயலாளர் மாரியப்பன், வார்டு தலைவர்கள் காமராஜ், மகாலிங்கம், ரதன், சுரேஷ்குமார், வார்டு நிர்வாகிகள் அகஸ்டின், பொன் சுதாகர், ஜெயபாண்டியன், செல்வராஜ், சகாயராஜ் உள்ளிட்ட மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.