அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்ததாக கூறப்படும் உத்தரகாண்ட் மாநில சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமை வகித்தார். அவர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, மேற்கு மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் கோபால், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், ராஜாராம், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், ஏ.டி. தனசேகரன், அந்தோணி குரூஸ் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், எஸ்.சி. துறை பிரபாகரன், மாணவர் காங்கிரஸ் பிளசி, ஆராய்ச்சி பிரிவு ஆடிட்டர் சிவ்ராஜ் மோகன், சிறுபான்மை பிரிவு மைதீன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், ஊடகப்பிரிவு ஜெயஜோதி, மாநில பேச்சாளர்கள் அப்துல் மஜித், பார்த்திபன், முன்னாள் மண்டல தலைவர் தங்கராஜ், மகாராஜன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஸ்பாபு, முருகன், வசந்த், சதீஷ், மாடக்கண், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இசத்தியம்மாள், சர்க்கரையம்மாள், வனஜா, சரஸ்வதி, கமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரியப்பன், மில்லை தேவராஜ், செய்யது அலி, கலைப்பிரிவு செயலாளர் மாரியப்பன், வார்டு தலைவர்கள் அகஸ்டின் ஜெபராஜ், காமராஜ், சித்திரை, பால்ராஜ், சேர்மபாண்டி, ரூஸ்வெல்ட், பரமசிவன், தனிஷ்லாஸ் மற்றும் வார்டு நிர்வாகிகள் ஜெயபாண்டியன், செல்வராஜ், பெரியநாயகம், சகாயராஜ், கோபால், ராமசாமி, விசுவாசம் உள்ளிட்ட மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராகவும், தீண்டாமை மற்றும் அவமதிப்பு செயல்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.