Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

உப்பளங்களை பாதுகாக்க கோரிக்கை: தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சந்திப்பு

Admin 9 hours ago தூத்துக்குடி
கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் கலந்து பேசிய பின்னர் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
தூத்துக்குடி, ஆக.21: தூத்துக்குடி கடற்கரையை ஒட்டியுள்ள முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு சென்று தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து, உப்பளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “நான் என்ன செய்ய வேண்டும்?” என கேட்டதாகவும், அதற்கு சங்க நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் கலந்து பேசிய பின்னர் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

5 days ago

உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த முள்ளக்காடு மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்; கூட்டத்தில் பரபரப்பு

5 days ago

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா: காந்தி சிலைக்கு எம். சகாயராஜ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை

6 days ago

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை அவமதித்த தீண்டாமை செயலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம்

6 days ago

மாவட்ட செயலாளராக முதல் முறையாக தூத்துக்குடி வருகை: அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு முதலமைச்சர் விஜய் ஆசியுடன் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன்: அமைச்சர் ஸ்ரீநாத்

1 week ago

தொகுதி மறுவரையறையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் கண்டனப் பேரணி

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்