Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

மன்னன் பூலித்தேவன் 311-வது பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில் கீதாஜீவன் புகழ் வணக்கம்

Admin 23 hours ago தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் புகழ் வணக்கம்
தூத்துக்குடி, செப்.1: இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதன்முதலில் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் மன்னன் பூலித்தேவனின் 311-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்னன் பூலித்தேவனின் திருவுருவப் படத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் மலர் தூவி, மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், அவைத்தலைவர் மற்றும் பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும், மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாநகர துணை செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், மாணவரணி நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மன்னன் பூலித்தேவனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

21 hours ago

பசுவந்தனை ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

1 day ago

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு: தூத்துக்குடியில் தீர்மானம்

1 week ago

தூத்துக்குடி உப்பளங்கள் கையகப்படுத்துதலைக் கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தல்

1 week ago

இளம் தலைமுறையினரை பாதுகாக்க அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ஸ்ரீநாத்

1 week ago

உப்பளங்களை பாதுகாக்க கோரிக்கை: தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சந்திப்பு

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்