Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

பசுவந்தனை ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

Admin 22 hours ago தூத்துக்குடி
தாசில்தார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது
ஓட்டப்பிடாரம், ஆக.31:
ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் செயல்பட்டு வரும் அமுதம் நியாய விலைக் கடையில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை (ஆக.31) காலை 10.30 மணி வரை ரேஷன் கடை திறக்கப்படாததால், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடை முன்பு காத்திருந்தனர். அப்போது அவ்வழியாகச் சென்ற சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவிடம் பொதுமக்கள், ரேஷன் கடையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கப்பிகுளம் பாபு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களில் விற்பனையாளர் வந்து ரேஷன் கடையைத் திறந்தார்.

எனினும், கப்பிகுளம் பாபு தலைமையில் 70-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயரதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பொருட்களை வாங்குவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், பசுவந்தனை அமுதம் நியாய விலைக் கடை வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் திறந்து செயல்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு, ரேஷன் பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டனர்.

முன்னதாக, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படாமல், கடை செயல்படாதது குறித்த எந்தத் தகவலும் அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்படாமல் விற்பனையாளர் கடையை பூட்டிச் சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவு: தூத்துக்குடியில் தீர்மானம்

6 days ago

தூத்துக்குடி உப்பளங்கள் கையகப்படுத்துதலைக் கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தல்

1 week ago

இளம் தலைமுறையினரை பாதுகாக்க அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ஸ்ரீநாத்

1 week ago

உப்பளங்களை பாதுகாக்க கோரிக்கை: தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சந்திப்பு

1 week ago

தூத்துக்குடியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

2 weeks ago

உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த முள்ளக்காடு மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்; கூட்டத்தில் பரபரப்பு

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்