சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் என போற்றப்படுபவருமான வ.உ.சிதம்பரத்தின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவச் சிலைக்கு சிறப்பு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் திருமந்திர நகர் – தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு வெள்ளிக் குடத்தில் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிலைக்கு மலர் மாலை அணிவித்து, சிவ முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகங்களும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய பணிகளும் நினைவுகூரப்பட்டன. அவரது தேசப்பற்று, துணிச்சல் மற்றும் தியாக உணர்வுகளை இளைய தலைமுறையினர் அறிந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா, பி. சிவலிங்கம், இந்து மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் எம். சுடலைமணி சஞ்சய், வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் திருமந்திர நகர் – தமிழ்நாடு அமைப்பின் மாவட்ட தலைவர் ஜி. பாலமுருகன் சிறப்பாக செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றினர்.