Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி: மொழிப்போர் தியாகிகள் தினம் – வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை!

Admin 2 months ago தூத்துக்குடி
மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் புகைப்படத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் புகைப்படத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியபோது தமிழ்மொழி, தமிழ் பண்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க திமுக தொடர்ந்து போராடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.




மேலும் செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

2 months ago

2026 சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை குழுக்கள் நியமனம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவிப்பு

2 months ago

77-வது குடியரசு தினம்: பண்டாரம்பட்டி டி.என்.டி.டி. ஏ தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை

2 months ago

காணாமல் போன செல்போன்கள் மீட்பு – போலிசார் ஒப்படைப்பு பக்தர்கள் நிம்மதி

2 months ago

3-வது வார்டில் பகுதி சபா கூட்டம் – கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்

2 months ago

20-வது வார்டில் பகுதி சபா கூட்டம் - மக்கள் குறைகளை கேட்டறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி

2 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்