Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

3-வது வார்டில் பகுதி சபா கூட்டம் – கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்

Admin 4 months ago தூத்துக்குடி
, 3-வது வார்டுக்கான பகுதி சபா கூட்டம் கலியா லாவோ பூங்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 3-வது வார்டு கவுன்சிலரும், தூத்துக்குடி மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவருமான ஆர்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி : ஜனவரி 25 
தூத்துக்குடி மாநகராட்சியில் பகுதி சபா திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், 3-வது வார்டுக்கான பகுதி சபா கூட்டம் கலியா லாவோ பூங்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 3-வது வார்டு கவுன்சிலரும், தூத்துக்குடி மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவருமான ஆர்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர்களான பிரபாகரன், செல்வராஜ், ஜவகர், டேனியல், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், 3-வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் இருந்து நேரடியாக குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,
“பொதுமக்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும், அவற்றை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்ளூர் மேம்பாடு தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பகுதி சபா கூட்டத்தில் ராஜாமணி, ராஜசேகர், ராஜேஷ், கோபால், சேவியர், ராமர், ஜெயா, நம்பி உள்ளிட்டோர் மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பகுதி சபா கூட்டத்தின் மூலம் தங்களின் கோரிக்கைகள் நேரடியாக கேட்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

2 hours ago

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

5 hours ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

9 hours ago

தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

2 days ago

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

2 days ago

அரசு கேபிளில் இருந்து மூன்று தொலைக்காட்சிகள் நீக்கம்: உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்