தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அண்ணாமலையின்
வி த லீடர் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்கள் நடைபெற்றது,
இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகர மையப் பகுதியில் உள்ள
சிவன்கோவில் தேரடி வீதியில் ராஜேஷ்கனி தலைமையில் நடைபெற்றது, உறுப்பினர் சேர்க்கை முகாமை உமரி எஸ் சத்தியசீலன் தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறுகையில் இந்த நிகழ்ச்சி அண்ணாமலை ஒப்புதலுடன் அவரது வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர் அதன்படி தூத்துக்குடியிலும் உறுப்பினர் சேர்க்கும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இதில் இளைஞர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர் என்று கூறினார், இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சென்று முகாம்களை தொடங்கி வைத்தார் சமூக ஊடக மூலமாக தொடர்பு கொண்ட நபர்களையும் நேரில் சந்தித்து உறுப்பினராக்கினர் இந்த நிகழ்ச்சியில் தெற்கு மண்டல் ஆசை மாதவன்,சின்னதங்கம்,பால பொய்சொல்லான் ,விஜய் துர்க்கையப்பன்,ஏ.பி கண்ணன், ஹரிகரசுதன், கார்த்திகை மீனா,பொன்விக்னேஷ்,சிலம்பொழி,பலக்குமார்,கந்தசாமி,முருகேசன்,ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆழ்வை கிழக்கு ஒன்றியம். சேதுவாய்தான் ஊராட்சியில் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது,
நாசரேத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற பொறுப்பாளர் ஜெயலிங்கம் நற்பணி மன்றத்தை கலைத்துவிட்டு அனைத்து உறுப்பினர்களையும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் இணைந்தனர், தொடர்ந்து நாசரேத் பகுதியில் உள்ள மக்களை இயக்கத்தில் இணைத்திட நோட்டீஸ் வழங்கி ஆலோசனை வழங்கினர்,ஆத்தூர் பேரூராட்சியில் சரவணன் தலைமையிலும்,
ஆழ்வை கிழக்கு ஒன்றியம். சேதுவாய்தான் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் வேல்முருகன் தலைமையிலும் நடைபெற்றது,
மெஞ்ஞானபுரத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற பொறுப்பாளர் முத்துமாரியை சந்தித்து அண்ணாமலை நற்பணி மன்றத்தை கலைத்துவிட்டு அனைத்து உறுப்பினர்களையும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினராக இணைந்தனர், மேலும் பொதுமக்கள் இணைந்திட முகம் நடத்தப்பட்டது,
ஆறுமுகநேரி பேரூராட்சியில் சண்முகம் சிவக்குமார்விஜயரகு ஜெயகுரு ஆகியோரின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் தண்டுபத்து ராமகனி இல்லத்தில் இருந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கி பரமன்குறிச்சி உட்பட15 மண்டலங்களிலும் முகாம்கள் நடைபெற்று பல ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.