தூத்துக்குடி மாநகராட்சி 20-வது வார்டு பகுதியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகளை நேரடியாக தெரிவித்தனர்.
குடிநீர் விநியோகத்தில் நிலவும் பிரச்சினை,சாலை வசதி மற்றும் பழுது பார்க்கும் பணிகள்,
மின்விளக்குகள் செயல்படாத நிலை,கழிவுநீர் கால்வாய் அடைப்பு,தூய்மை பணிகள் தாமதம்,போன்ற அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுமக்கள் கூறிய அனைத்து கோரிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், பகுதி சபா கூட்டங்கள் மூலம் மக்களின் பிரச்சினைகள் நேரடியாக அறியப்படுவதால், மாநகராட்சி நிர்வாகம் இன்னும் திறம்பட செயல்படும் என அவர் தெரிவித்தார்.