Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

2026 சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை குழுக்கள் நியமனம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவிப்பு

Admin 2 months ago தூத்துக்குடி
மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தலைமையில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, ஜனவரி 27
வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கன் அறிவித்தார். மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தலைமையில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் தங்களது தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகள், வளர்ச்சி தேவைகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தேர்தல் அறிக்கையை பா.ஜ.க தலைமைக்கு சமர்ப்பிக்க உள்ளன.


தூத்துக்குடி தொகுதி:
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் டி.சின்னதங்கம், வடக்கு மண்டல் தலைவர் கே.சுதா

 திருவைகுண்டம் தொகுதி:
பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் ஜே.சாமிநாதன், சாத்தான்குளம் மண்டல் தலைவர் கே.சரவணன்

 திருச்செந்தூர் தொகுதி:
மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.திருநாகரன், மாவட்ட துணை தலைவர் எஸ்.சரஸ்வதி

மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையிலும், தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கன் தெரிவித்தார்

மேலும் செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

2 months ago

77-வது குடியரசு தினம்: பண்டாரம்பட்டி டி.என்.டி.டி. ஏ தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை

2 months ago

காணாமல் போன செல்போன்கள் மீட்பு – போலிசார் ஒப்படைப்பு பக்தர்கள் நிம்மதி

2 months ago

3-வது வார்டில் பகுதி சபா கூட்டம் – கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்

2 months ago

20-வது வார்டில் பகுதி சபா கூட்டம் - மக்கள் குறைகளை கேட்டறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி

2 months ago

தூத்துக்குடி: மொழிப்போர் தியாகிகள் தினம் – வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை!

2 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்