Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

காணாமல் போன செல்போன்கள் மீட்பு – போலிசார் ஒப்படைப்பு பக்தர்கள் நிம்மதி

Admin 2 months ago தூத்துக்குடி
செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் தவறிய 3 செல்போன்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்
கோவில்பட்டி : ஜனவரி 25

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நேற்று (25) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குற்றப் பிரிவு போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலின் போது பக்தர்கள் தவறவிட்ட மூன்று செல்போன்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர், கோவில் காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்து, உரிமையாளர்களை அடையாளம் கண்டு அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கூட்ட நெரிசலான சூழலிலும் துரிதமாக செயல்பட்டு செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.
திருவிழா முழுவதும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

2 months ago

2026 சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை குழுக்கள் நியமனம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவிப்பு

2 months ago

77-வது குடியரசு தினம்: பண்டாரம்பட்டி டி.என்.டி.டி. ஏ தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை

2 months ago

3-வது வார்டில் பகுதி சபா கூட்டம் – கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்

2 months ago

20-வது வார்டில் பகுதி சபா கூட்டம் - மக்கள் குறைகளை கேட்டறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி

2 months ago

தூத்துக்குடி: மொழிப்போர் தியாகிகள் தினம் – வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை!

2 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்