Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

77-வது குடியரசு தினம்: பண்டாரம்பட்டி டி.என்.டி.டி. ஏ தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை

Admin 4 months ago தூத்துக்குடி
தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் முன்னிலையில், வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி, ஜன.26:
நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி பகுதியில் உள்ள TNDTA தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் முன்னிலையில், வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய உறுதிமொழி எடுத்துக் கொண்டு அவர், மாணவர்களுக்கு குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, விழாவின் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். இதனால் பள்ளி வளாகம் தேசபக்தி உணர்வால் களைகட்டியது.

இந்த விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், மாணவர்களின் கல்வி மற்றும் அனுபவ வளர்ச்சிக்காக விமானப் பயணம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றதோடு, தனது சிறப்பான சேவைக்காக மாநில விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியனும் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தார். குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, மாணவர்களிடையே நாட்டுப்பற்று மற்றும் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.

மேலும் செய்திகள்

அரசு கேபிளில் இருந்து மூன்று தொலைக்காட்சிகள் நீக்கம்: உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

4 hours ago

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

4 months ago

2026 சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க தேர்தல் அறிக்கை குழுக்கள் நியமனம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவிப்பு

4 months ago

காணாமல் போன செல்போன்கள் மீட்பு – போலிசார் ஒப்படைப்பு பக்தர்கள் நிம்மதி

4 months ago

3-வது வார்டில் பகுதி சபா கூட்டம் – கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி மக்கள் குறைகளை கேட்டறிந்தார்

4 months ago

20-வது வார்டில் பகுதி சபா கூட்டம் - மக்கள் குறைகளை கேட்டறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி

4 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்