Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ₹1,337 கோடியாக உயர்வு - இயக்குநர் சலி எஸ். நாயர்.

Admin 3 months ago தூத்துக்குடி
வங்கியின் மொத்த வணிகம் ₹1,15,091 கோடியாக உயர்ந்து 17.37% வளர்ச்சி பெற்றுள்ளது - நிர்வாக இயக்குநர் சலி எஸ். நாயர்
தூத்துக்குடி, ஏப். 27:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2025–26 நிதியாண்டில் நிகர லாபம் ₹1,337.55 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சலி எஸ். நாயர் தெரிவித்தார். இது கடந்த ஆண்டை விட 13.10% அதிகமாகும்.

மார்ச் 31, 2026-இல் முடிவடைந்த நிதியாண்டிற்கான செயல்திறன் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மொத்த வணிகம் ₹1,15,091 கோடியாக உயர்ந்து 17.37% வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார்.

மேலும், வைப்புத் தொகைகள் 14.94% உயர்ந்து ₹61,712 கோடியாகவும், மொத்த கடன் ₹53,379 கோடியாக உயர்ந்து 20.32% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

வங்கியின் சொத்து தரம் குறிப்பிடத்தக்க முறையில் மேம்பட்டு, மொத்த வாராக்கடன் (Gross NPA) 1.25% இலிருந்து 0.73% ஆகவும், நிகர வாராக்கடன் (Net NPA) 0.36% இலிருந்து 0.18% ஆகவும் குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 44 புதிய கிளைகள் தொடங்கப்பட்டதால், வங்கியின் கிளைகள் எண்ணிக்கை நாடு முழுவதும் 622 ஆக உயர்ந்துள்ளது.

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த AI அடிப்படையிலான கால் சென்டர், Oracle CX தளம், பாதுகாப்பான இணைய வங்கி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வங்கியின் செயல்திறனை முன்னிட்டு, ₹10 முகவிலை கொண்ட பங்கிற்கு ₹12.50 இறுதி லாபப்பங்கீடு வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.

MSME மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் வங்கி எடுத்துள்ள கவனம் மற்றும் நிலையான வளர்ச்சி உத்தி இந்த சாதனைக்கு காரணம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

உப்பள தொழிலாளர்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: உப்பு உற்பத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

13 hours ago

சாத்தான்குளம் நெடுஞ்சாலைகளில் முட்செடிகளை அகற்ற கோரிக்கை- நாம் தமிழர் கட்சியினர் நெடுஞ்சாலைத்துறைக்கு மனு

2 months ago

21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு கடும் உத்தரவு

2 months ago

கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் 3 வது வார்டு பகுதியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

3 months ago

33% இடஒதுக்கீடு – பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி பெண்களின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்- அன்னபூர்ணா

3 months ago

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

3 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்