Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு கடும் உத்தரவு

Admin 2 months ago தூத்துக்குடி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள்
சென்னை, மே 14:

தமிழகத்தில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு அரசு மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை பணியாளர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விதிமுறையை மீறினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003-ன் விதி 11A படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ, வழங்கவோ கூடாது என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது அந்த விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

சமீப காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகார்கள் காரணமாக இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், மது வாங்க வருபவர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள ஆவணங்களை சரிபார்த்த பிறகே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட அளவில் பறக்கும் படையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட உள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்

உப்பள தொழிலாளர்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: உப்பு உற்பத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

13 hours ago

சாத்தான்குளம் நெடுஞ்சாலைகளில் முட்செடிகளை அகற்ற கோரிக்கை- நாம் தமிழர் கட்சியினர் நெடுஞ்சாலைத்துறைக்கு மனு

2 months ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ₹1,337 கோடியாக உயர்வு - இயக்குநர் சலி எஸ். நாயர்.

3 months ago

கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் 3 வது வார்டு பகுதியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

3 months ago

33% இடஒதுக்கீடு – பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி பெண்களின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்- அன்னபூர்ணா

3 months ago

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

3 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்