Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

33% இடஒதுக்கீடு – பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி பெண்களின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்- அன்னபூர்ணா

Admin 6 hours ago தூத்துக்குடி
நாட்டின் ஜனநாயக வளர்ச்சியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டமாகும்
தூத்துக்குடி ஏப்ரல் 14

இந்திய அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முக்கியமான சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா தெரிவித்துள்ளார்.

“பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா” என அழைக்கப்படும் இந்தச் சட்டம், பெண்களின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த முயற்சி, நாட்டின் ஜனநாயக வளர்ச்சியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டமாகும் என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பெண்கள் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படுவது, பெண்களின் அதிகாரமளிப்பில் முக்கிய முன்னேற்றமாகும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சட்டத்தின் படி, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் பெண்கள் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு தங்களது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வாய்ப்பு பெறுவார்கள் எனவும் விளக்கினார்.

மேலும், இந்த இடஒதுக்கீடு தொகுதிகள் காலகட்டங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி வழங்கப்படும் என்றும், ஒதுக்கப்பட்ட இனப்பிரிவினரான (எஸ்.சி./எஸ்.டி.) பெண்களுக்கும் உரிய பங்கு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பெண்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிப்பதன் மூலம் கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மகளிர் சார்ந்த கொள்கைகள் வலுப்பெறும். கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை பெண்களின் குரல் அரசியல் மேடையில் வலுப்பெற்று, சமூக நீதி மற்றும் சமத்துவம் நடைமுறையில் உறுதி செய்யப்படும் எனவும் கூறினார்.

இது வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல; பெண்களின் தலைமைத்துவ திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அமையும். வருங்கால தலைமுறைக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என அன்னபூர்ணா தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்தச் சட்டம் குறித்து சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இடஒதுக்கீடு நடைமுறை மற்றும் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. எனினும், பெண்களுக்கு சமமான அரசியல் வாய்ப்புகளை வழங்கும் இந்த 33% இடஒதுக்கீடு, நாட்டின் ஜனநாயக அமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

6 days ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 week ago

தூத்துக்குடியில் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!

1 week ago

தூத்துக்குடியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்: “ஆட்சிக்கு வந்தவுடன் ₹10,000 உதவி” – செல்லப்பாண்டியன் உறுதி

1 week ago

தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு

1 week ago

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்