பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவின் 15 மண்டலங்களிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அருள்மிகு பாகம்பரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டி பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வடக்கு ரத வீதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் AM. ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், கிழக்கு மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம், ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வணிகப் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், ஓபிசி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ், மாவட்டத் துணைத் தலைவர் காளி ராஜா, அணிப் பிரிவு மாவட்டத் தலைவர்கள் ஓம் பிரபு, ஜெயக்குமார், உஷாதேவி வினோத், மண்டலப் பொறுப்பாளர்கள் ஜெய ரூபி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அணிப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்