நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, கரு. நாகராஜன் அவர்களை, வீ த லீடர் இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வீ த லீடர் இயக்கத்தின் அமைப்புக் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கரு. நாகராஜன் அவர்களுக்கு, இயக்கத்தின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும்.
இயக்கத்தின் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தி, அதன் செயல்பாடுகளை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்கு நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.