தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.