இதையொட்டி ஜெபமாலை பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. புதுக்கோட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருட்பணி விஜயன் அடிகளார் தலைமை வகித்து திருக்கொடியேற்றி வைத்தார். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, சனிக்கிழமை (12.09.2026) மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனையுடன் பெருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி பிரதீப் அடிகளார் தலைமை வகித்து, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் வழங்குகிறார்.

ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) காலை 10 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி வளன் அடிகளார் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு ஊர் சமபந்தி அசன விருந்து நடைபெறுகிறது.
பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை (14.09.2026) மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும், நன்றித் திருப்பலியும் நடைபெறுகிறது. பாத்திமாநகர் பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி சார்லஸ் அடிகளார் தலைமை வகிக்கிறார். உதவி பங்குத்தந்தை அருட்பணி ஜெரி அடிகளார் முன்னிலை வகிக்கிறார்.
சிலுவையா ஆலயப் பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் OLFTuticorin யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. விழா நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு சிலுவையாரின் ஆசீரைப் பெற்றுச் செல்லுமாறு பாத்திமாநகர் ஊர் நலக் கமிட்டி, சிலுவையா கோவில் நிர்வாகக் குழுவினர், பங்கு இறைமக்கள் மற்றும் திருஇருதய அருட்சகோதரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.