Advertisement

Share On
District News

முள்ளக்காட்டில் கருப்புக்கொடி போராட்டம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் போராட்டம்

Admin 6 hours ago தூத்துக்குடி
தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
தூத்துக்குடி, செப்.7:
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உப்பளங்களில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழிலை பாதிக்கும் வகையில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். உப்பளங்களை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, உப்பளங்களில் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி திரண்ட போராட்டக்காரர்கள், கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

வ.உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள்: தமிழ்நாடு வ.உ.சி.பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

2 days ago

ரீல்ஸ் அரசியலை விட்டுவிட்டு ரியாலிட்டி அரசியலுக்கு வாருங்கள்” பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

4 days ago

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் 1,800 ஏக்கர் நில எடுப்பை நிறுத்துக; 25 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக! உப்பளத் தொழிலை பாதுகாக்க வேண்டும்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் – மத்திய மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான ஏ.எஸ். லாரன்ஸ் வலியுறுத்தல்

4 weeks ago

பனை மேம்பாட்டு கழகம் அமைக்கும் அறிவிப்பு வரவேற்பு: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு டாக்டர் எஸ்.ஜே. கென்னடி பாராட்டு, நன்றி

1 month ago

போராட்டத்திற்கு தள்ளினால் தூத்துக்குடி தாங்காது" உப்பளத் தொழிலை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை

1 month ago

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பிறந்தநாள்: தூத்துக்குடியில் சிவன், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

1 month ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்