Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும்: அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை

Admin 13 hours ago தூத்துக்குடி
தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்க்கப்படாது - முதல்வர் விஜய்


சென்னை, ஜூலை 16:

மாநில அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஊழல் மற்றும் நிர்வாக ஒழுங்கு தொடர்பாக அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் அமைச்சரவைப் பதவியும் பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்க்கப்படாது. தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். த.வெ.க. அரசு லஞ்சமற்ற, வெளிப்படையான அரசாக இருக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள வீடியோக்களை பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளின் இயல்பான கல்விச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற கள ஆய்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டத்தின் போது, சில அமைச்சர்களை குறிப்பிட்டே முதலமைச்சர் விஜய் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், த.வெ.க. அரசில் ஊழலுக்கு எந்தவித சமரசமும் இருக்காது என்பதையும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்வதில் அரசு உறுதியாக இருப்பதையும் முதலமைச்சர் விஜய் மீண்டும் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

கரூர் இனாம் நில விவகாரம்: ரயத்வாரி பட்டா பெற்ற விவசாயிகளின் உரிமையை உறுதி செய்யும் நடவடிக்கையை வரவேற்கிறோம் – வீ த லீடர் தலைவர் அண்ணாமலை

5 days ago

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு சந்தேகம்: விளக்கவுரைத் தேர்வை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் – வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

மருத்துவ இடங்கள் பாதிப்பு: நிர்வாகத் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் – அண்ணாமலை

1 week ago

"போதை இல்லா தமிழகம்" மாநில மாநாடு: தூத்துக்குடியில் இருந்து திரளாக பங்கேற்க உமரி சத்தியசீலன் அழைப்பு

1 week ago

தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசனார் 167-வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன்,மாலை அணிவித்து மரியாதை!

1 week ago

அமைச்சர் பதவி விலகக் கோரி தூத்துக்குடியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: 125 பேர் கைது

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்