Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசனார் 167-வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன்,மாலை அணிவித்து மரியாதை!

Admin 8 hours ago தூத்துக்குடி
பேரவை நிறுவனத் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன், பேரவை நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி, ஜூலை 7:

தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை - ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில், லண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற சமூக நீதிப் போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனாரின் 167-வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி போல்டன்புரத்தில் நடைபெற்றது.

போல்டன்புரத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன், பேரவை நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு அறக்கட்டளைத் தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் மாடசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரசாத் முன்னிலை வகித்தார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் அர்ஜுன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் விஜி பாண்டியன், ஆட்டோ கணேசன், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் கண்ணன், முத்துலட்சுமி, கார்த்திக் முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.

முடிவில், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு நன்றியுரை ஆற்றினார்.

மேலும் செய்திகள்

அமைச்சர் பதவி விலகக் கோரி தூத்துக்குடியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: 125 பேர் கைது

1 week ago

முதல்வர் விஜய் கட்சி தொடங்கிய உடனே முதல்வராகவில்லை; வி த லீடர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி தீவிரமாக செயல்படும் உள்ளாட்சித் தேர்தலுக்கு உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் என கரு நாகராஜன் வலியுறுத்தல்

1 week ago

கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய பேருந்து இயக்கம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

1 week ago

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலையின் "வி த லீடர்" இயக்க மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதிய அறிவிப்புகளை கரு நாகராஜன் வெளியிடுகிறார் டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி மறுப்பால் பரபரப்பு

1 week ago

முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா: முத்தையாபுரம் பல்க் திடலில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

2 weeks ago

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

2 weeks ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்