Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலையின் "வி த லீடர்" இயக்க மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதிய அறிவிப்புகளை கரு நாகராஜன் வெளியிடுகிறார் டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி மறுப்பால் பரபரப்பு

Admin 17 hours ago தூத்துக்குடி
மாவட்ட அளவிலான முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 26) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி, ஜூன் 25:

அண்ணாமலை தொடங்கியுள்ள "வி த லீடர்" இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை பணி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட பொறுப்பாளர் உமரி எஸ். சத்தியசீலன் தலைமையில் நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து கிராமங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக சின்னதங்கம், ராஜேஷ்கனி, துர்கையப்பன், ஆசை மாதவன், பொன் விக்னேஷ் ஆகியோர் தலைமையிலும், தொடர்ந்து சிவத்தையாபுரத்தில் ஹரிகரசுதன், ஆத்தூரில் சரவணன், ஸ்ரீவைகுண்டத்தில் பாலமுருகன், ஆறுமுகநேரியில் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றன. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இயக்கத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 26) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு உமரி எஸ். சத்தியசீலன் தலைமை தாங்குகிறார். அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி நடைபெறும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரு நாகராஜன் கலந்து கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ள இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை உமரி சத்தியசீலன், சின்னதங்கம், மாதவன், ராஜேஷ்கனி, சிவமுருகன் ஆதித்தன், பால பொய்சொல்லான், துர்கையப்பன், ஜமீன் கிருஷ்ணன், கார்த்திகை மீனா, எம்.சி. சேகர், ராஜகோபால், கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு மாநகராட்சி அலுவலர்களிடம் இயக்க நிர்வாகிகள் விளக்கம் கோரி பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



மேலும் செய்திகள்

முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா: முத்தையாபுரம் பல்க் திடலில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

3 days ago

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

5 days ago

அரசுப் பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்: வீ த லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

5 days ago

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

1 week ago

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்