Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Admin 11 hours ago தூத்துக்குடி
ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்த விழா!
தூத்துக்குடி, ஜூன் 20:

இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து, இன்னாசியார்புரத்தில் உள்ள அன்பு சிறார் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், பிரையண்ட் நகரில் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவ, மாணவியர் பள்ளியில் இரவு உணவு வழங்கப்பட்டதுடன், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மீனவர் காங்கிரஸ் துறைச் செயலாளர் சிமியோன், மகிளா காங்கிரஸ் தலைவி ப்ரீத்தி வினோத், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பர்ணபாஸ், எஸ்.சி. துறை நிர்வாகி ஏ.டி. பிரபாகரன், மாநில பேச்சாளர் பார்த்திபன், தென்மண்டல ஊடகப் பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலாளர் கோபால், மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், ரஞ்சிதம் ஜெபராஜ், சேவியரம்மாள், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராம் மற்றும் இளைஞர், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: தூத்துக்குடியில் உள்ள காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்குகிறார். உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்

அரசுப் பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்: வீ த லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

11 hours ago

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

5 days ago

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

5 days ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

5 days ago

தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

1 week ago

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்