Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா: முத்தையாபுரம் பல்க் திடலில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

Admin 3 hours ago தூத்துக்குடி
தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி, ஜூன் 22:

தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பல்க் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.டி.ஆர். விஜய் சீலன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சதீஷ்குமார், வழக்கறிஞர் வாரியார், ரவிக்குமார், தனபால்ராஜ், சுந்தரலிங்கம், முருகன், திருப்பதி, அன்புசெல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தெற்குப் பகுதி செயலாளர் இசக்கிமுத்து மற்றும் பொன்ராஜ் வரவேற்றனர்.

விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக பெண்களுக்கு சேலைகள், அரிசிப் பைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் தினேஷ், மாரிமுத்து, ரோமன்ஸ், வெங்கடேஷ், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொன்ராஜா, ஜோயல், கஜன், அசோக், பாலமுருகன், தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும், நிர்வாகிகள் பிரவீன்குமார், கிருபாகரன், ஆனந்தராஜ், முனிராஜ், பச்சைப்பெருமாள், சக்திவேல், ராஜேஷ், முருகேசன், ஜோசப், பாலமுகுந்தன், அலெக்ஸ், பெவின், செல்வரதி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.

முடிவில் பிரவீன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

2 days ago

அரசுப் பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்: வீ த லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

2 days ago

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

1 week ago

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

1 week ago

தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்