Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

"போதை இல்லா தமிழகம்" மாநில மாநாடு: தூத்துக்குடியில் இருந்து திரளாக பங்கேற்க உமரி சத்தியசீலன் அழைப்பு

Admin 13 hours ago தூத்துக்குடி
த லீடர் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி, ஜூலை 8:

"மாறுவோம்... மாற்றுவோம்... போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என்ற முழக்கத்துடன், வீ த லீடர் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு, இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை Ex. ஐபிஎஸ் தலைமையில் வருகிற ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வீ த லீடர் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி குமரி சத்தியசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஜூலை 12-ஆம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி புதூர்–பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இருந்து மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றிணைந்து பொள்ளாச்சிக்கு புறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, வீ த லீடர் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் பெருவாரியாக கலந்து கொண்டு, "மாறுவோம்... மாற்றுவோம்... போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என்ற இலக்கை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லவும், இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை Ex. ஐபிஎஸ் கரத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைவோம் என உமரி சத்தியசீலன் தனது அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

மருத்துவ இடங்கள் பாதிப்பு: நிர்வாகத் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் – அண்ணாமலை

5 hours ago

தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசனார் 167-வது பிறந்தநாள் விழா - தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன்,மாலை அணிவித்து மரியாதை!

1 day ago

அமைச்சர் பதவி விலகக் கோரி தூத்துக்குடியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: 125 பேர் கைது

1 week ago

முதல்வர் விஜய் கட்சி தொடங்கிய உடனே முதல்வராகவில்லை; வி த லீடர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி தீவிரமாக செயல்படும் உள்ளாட்சித் தேர்தலுக்கு உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் என கரு நாகராஜன் வலியுறுத்தல்

1 week ago

கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய பேருந்து இயக்கம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

1 week ago

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலையின் "வி த லீடர்" இயக்க மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதிய அறிவிப்புகளை கரு நாகராஜன் வெளியிடுகிறார் டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி மறுப்பால் பரபரப்பு

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்