தூத்துக்குடியில் வருகிற நவம்பர் 28-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
வருகிற 28-ம் தேதி தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற உள்ள இந்தப் பயிற்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், மாநில மறுசீரமைப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையொட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள், நிர்வாகிகளுக்கான பொறுப்புகள், மண்டல் ஒருங்கிணைப்பாளர்களின் பங்கேற்பு மற்றும் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தென்மண்டல காங்கிரஸ் மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவராமன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் க. பெருமாள்சாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் லாரன்ஸ் ராபின்சன், நாகர்கோவில் மாநகர் மாவட்டத் தலைவர் சிவபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்டப் பார்வையாளர்கள் முத்தழகன், பூவை ஜேம்ஸ், பஞ்சாட்சரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், காங்கிரஸ் என்.ஜி.ஓ. மாநில ஒருங்கிணைப்பாளர் புல்லட் ராஜதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, ராமநாதபுரம், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, நாகர்கோவில் மாநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மண்டல் ஒருங்கிணைப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ள மண்டல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாட்டை சிறப்பான முறையில் நடத்துவது என்றும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தூத்துக்குடியில் அகில இந்திய மற்றும் மாநில அளவிலான காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருப்பது கட்சியினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.