Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

Admin 16 hours ago தூத்துக்குடி
SIT அமைக்க அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்
சென்னை, செப்.25:

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கின் பின்னணி, இதுவரை நடைபெற்ற விசாரணை, வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை விரிவாக விசாரிக்கும் வகையில் SIT அமைக்கப்பட்டுள்ளது. 

தேன்மொழி தலைமையில் SIT

சென்னை காவல்துறையில் கூடுதல் ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றும் ஐஜி தேன்மொழி தலைமையில் இந்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையில் இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள டிஐஜி திஷா மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகளும் குழுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எஸ்.பி. அந்தஸ்திலான முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகியோரும் SIT குழுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குழு, வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து விசாரிப்பதுடன், இதற்கு முன்பு நடைபெற்ற விசாரணையில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தவறுகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SIT அமைக்க அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்

இந்நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, ஜெம் வீரமணி வழக்கில் கடந்த காலங்களில் விசாரணையை நீர்த்துப்போகச் செய்ய முயன்றதாக கூறப்படும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் உடனடியாக SIT அமைக்க வேண்டும் என்று செப்.23 அன்று வலியுறுத்தியிருந்தார். 

வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார். 

தற்போது தமிழக அரசு SIT அமைத்து உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஜெம் வீரமணி வழக்கின் விசாரணையில் அடுத்தகட்ட முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஏதேனும் தவறுகள் நடைபெற்றுள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து SIT விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

16 hours ago

தாராபுரம் இடைத்தேர்தல்: கோவிந்தபுரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தீவிர பிரசாரம்

1 day ago

தூத்துக்குடி மாநகராட்சியில் 100% கழிவு சேகரிப்பு, தரம் பிரித்தலுக்கு தீவிர நடவடிக்கை 60 வார்டுகளிலும் வீடு, வணிக நிறுவனங்களில் நேரடி ஆய்வு – விதிமீறல்களுக்கு அபராதம்

1 day ago

வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகை கடை விவகாரம்: வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா நேரில் விசாரணை

1 day ago

தாராபுரம் இடைத்தேர்தல்: ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

2 days ago

ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: அண்ணாமலை

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்