தூத்துக்குடி, அக்.28:
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட நிர்வாகிகள், பகுதித் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், பகுதித் தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.எம். சகாயராஜூடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மாவட்டப் பார்வையாளர் பஞ்சாட்சரம், தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவராமன் மற்றும் இயக்க மறுசீரமைப்பு மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பரிந்துரைத்த பட்டியலை ஏற்று, புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத் தலைவருடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்று, இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் விவரம்
அரசியல் விவகாரக் குழு
முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல் ராஜ், ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன், பி. முனியதங்க நாடார், அகஸ்டின் ஜெபராஜ், செல்வராஜ், ஜெயக்கொடி, தங்கராஜ், பார்த்திபன், சுப்பிரமணியன், ஏ.டி.எஸ். அருள், நவ்ரோஜ் ஜே. நேரு, பாரகன், அந்தோணிமுத்து, மார்கஸ், டேவிட் பிரபாகரன், ராதாகிருஷ்ணன், தனபால் ராஜ், முத்துராஜன், சீனிவாச ஆசாரி, சேகர், செந்தூர்பாண்டி, சாமுவேல் ஞானதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பொருளாளர்
ஐசன் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத்தலைவர்கள்
தனசேகரன், முத்துப்பாண்டி, வசந்தமலர், அருள் வளன், சுரேஷ், ஜெபராஜ், டேவிட் வசந்தகுமார், கபிரியேல் பிரபாகர், நாகேந்திரன், ராஜாராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் செயலாளர்கள்
காமராஜ், குமார முருகேசன், முனியசாமி, கணேசன், புல்டன் ஜெசின், செல்வன் ஜெபராஜ், மிகவேல் செல்வராஜ், தேவராஜ், அந்தோணி குரூஸ், ஆண்ட்ரூஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயலாளர்கள்
கோபால், பொன்ராஜ், இக்னேசியஸ், மாரியப்பன், ரூஸ்வெல்ட், காமாட்சி, தனபாலன், தனிஷ்லாஸ், செல்வராஜ், மாரியப்பன், பர்ட் ராயல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 21 செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகுதித் தலைவர்கள்
தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் நான்கு பகுதிகளுக்கான தலைவர்களாக வடக்கு பகுதியில் மைக்கேல் பிரபாகர், கிழக்கு பகுதியில் சேவியரம்மாள், மேற்கு பகுதியில் நிர்மல் கிறிஸ்டோபர், தெற்கு பகுதியில் பிராங்க்ளின் ஜோஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, வாக்குச்சாவடிகள் வாரியாக 40 மண்டல ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் நியமனத்தின் மூலம் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பணிகளை வலுப்படுத்தவும், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.