Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

இது தமிழ்நாடா… உத்தரப்பிரதேசமா? தவெக வழங்குவது ஆட்சியா… க்ரைம் த்ரில்லர் படமா? – கீதாஜீவன் கடும் விமர்சனம்!

Admin 1 hour ago தூத்துக்குடி
முன்பெல்லாம் ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று பதாகைகள் வைக்கும் நிலை இருந்தது. தற்போது ‘தவெகவினர் ஜாக்கிரதை’ என்று பதாகைகள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது கீதா ஜீவன் முன்னாள் திமுக அமைச்சர்
தூத்துக்குடி, அக்.24:

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், இரட்டைக் கொலைகள், சிறுமிகள் மீதான துன்புறுத்தல்கள் என அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தவெக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், இரட்டைக் கொலைகள், சிறுமிகள் மீதான துன்புறுத்தல்கள் என மாநிலம் முற்றிலும் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தவெக வழங்குவது ஆட்சியா அல்லது க்ரைம் த்ரில்லர் படமா? இது தமிழ்நாடா, உத்தரப்பிரதேசமா? என்று கேட்கும் அளவுக்கு அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் நிகழ்வது நெஞ்சைப் பதற வைக்கிறது.

வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்குத் தவெக நிர்வாகியால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்ற பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரது கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் பழனி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலும் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் நடைபெறும் பெருங்குற்றங்களுக்குப் பின்னால் ஆளும் தவெகவினருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர் தவெக எம்எல்ஏ என்றும், போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மாவட்டப் பொறுப்பாளர், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் மாவட்டச் செயலாளர் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர் தவெகவின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்றும், 137 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர் பூபாலன் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்பெல்லாம் ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று பதாகைகள் வைக்கும் நிலை இருந்தது. தற்போது ‘தவெகவினர் ஜாக்கிரதை’ என்று பதாகைகள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

இது ஷூட்டிங் அல்ல… ஆட்சி!

சீன்பேப்பரைப் பார்த்துப் படித்து நடித்துவிட்டுச் செல்வதற்கு இது திரைப்படப் படப்பிடிப்பு அல்ல; ஆட்சி என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு! “வாழ்வாதாரத்தை அழித்து கப்பல் கட்டும் தளம் வேண்டாம்” – சப் கலெக்டர் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உப்பளத் தொழிலாளர்கள் திட்டவட்டம்!

2 hours ago

தூத்துக்குடியில் கல்விக் கடன் முகாம்: கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தொடங்கி வைத்தார்!

21 hours ago

18 ஆண்டுகளாக வளர்ச்சியில்லை; வரி மட்டும் 300 சதவீதம் உயர்வா? இணைக்கப்பட்ட ஊராட்சிகளை மீண்டும் ஊராட்சிகளாக மாற்ற வேண்டும்! காமராஜர் மக்கள் சங்கம் – பொதுமக்கள் கோரிக்கை

1 week ago

உப்பளங்களைப் பாதுகாக்கும் போராட்டம்: வர்த்தகத் தொழில் சங்கம் ஆதரவு அளிக்க உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

1 week ago

தூத்துக்குடியில் மத்திய அரசின் 20-க்கும் மேற்பட்ட திட்டங்களை விளக்கும் ரங்கோலி கோலம்! பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையைப் போற்றும் வகையில் பாஜக விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 week ago

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்! வேடமணிந்து விரதம் தொடங்கிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் – அக்டோபர் 20-ல் சூரசம்ஹாரம்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்