Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து பொதுமக்கள், உப்பளத் தொழிலாளர்கள் வெளிநடப்பு!

Admin 1 hour ago தூத்துக்குடி
முள்ளக்காடு, பொட்டல்காடு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தூத்துக்குடி, நவ.2:

தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி, முள்ளக்காடு ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தைப் பொதுமக்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கொரிய நாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக சுமார் 1,700 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரம்பரியமாக உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சி தினத்தை முன்னிட்டு முள்ளக்காடு ஊராட்சியின் கிராம சபைக் கூட்டம் பொட்டல்காடு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவஹர் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் நாராயணன், ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

அப்போது முள்ளக்காடு, பொட்டல்காடு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கப்பல் கட்டும் தளத்தை இந்தப் பகுதியில் அமைக்கக்கூடாது; இதற்காக விவசாயம் மற்றும் பாரம்பரிய உப்பு உற்பத்தி நடைபெறும் நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், பொதுமக்களின் கோரிக்கைகளைத் தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யாமல், எதிர்ப்பை மனுவாக எழுதி அளித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் கிராம சபைக் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கை ஏற்கப்படாததைத் தொடர்ந்து, சேகர், ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பொன்ராஜ், ராமர், ராஜா உள்ளிட்ட உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள், உப்பளத் தொழிலாளர்கள் எனப் பலரும் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

கிராம மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இப்பிரச்சினையில் கிராம சபைக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றக் கோரிய நிலையில், அது ஏற்கப்படாததால் ஏற்பட்ட இந்த வெளிநடப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞ

மேலும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம்! மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவிப்பு – 40 மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

4 days ago

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்கிறோம்! நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு குறித்து தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் – வீ த லீடர் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

6 days ago

முத்தையாபுரம் பகுதியில் தொடரும் சாலை விபத்துகள்! உப்பாத்து ஓடை முதல் தோப்பு தெரு வரை சாலையோர கனரக வாகனங்களை அகற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

1 week ago

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட பணிகளுக்கு தவெக திறப்பு விழா நடத்துகிறது! “திட்டமிட்டது திமுக; ரிப்பன் வெட்டுவதால் சாதனைக்குச் சொந்தக்காரராக முடியாது” தவெக – கீதா ஜீவன்

1 week ago

இது தமிழ்நாடா… உத்தரப்பிரதேசமா? தவெக வழங்குவது ஆட்சியா… க்ரைம் த்ரில்லர் படமா? – கீதாஜீவன் கடும் விமர்சனம்!

1 week ago

தூத்துக்குடி உப்பளத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு! “வாழ்வாதாரத்தை அழித்து கப்பல் கட்டும் தளம் வேண்டாம்” – சப் கலெக்டர் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உப்பளத் தொழிலாளர்கள் திட்டவட்டம்!

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்