Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

இரட்டைமலை சீனிவாசனார் 81-வது நினைவு தினம் தூத்துக்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

Admin 21 hours ago தூத்துக்குடி
அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தூத்துக்குடி, செப்.18-

தூத்துக்குடி போல்டன்புரத்தில் அமைந்துள்ள திவான் பகதூர் பெண்ணுரிமைக் காவலர் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு, அவரது 81-வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மற்றும் ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிறுவனர் தலைவர் புலி.செ. இளவரசபாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சமூகப் பணிகள் மற்றும் உரிமைப் போராட்டங்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
1789731692_1005318732.jpg1789731701_1005318736.jpg
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி செயலாளர் மாரிச்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் அர்ஜுன், முன்னாள் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் விக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், த.அன்பு, உதயா, மாடசாமி, கருப்பசாமி, செல்வம், விக்டர், வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுக முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இயக்கத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைவரும் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது சமூகப் பணிகளையும் உரிமைப் போராட்டங்களையும் நினைவுகூர்ந்தனர்.

மேலும் செய்திகள்

த லீடர் இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜன் நியமனம் அண்ணாமலை அறிவிப்பு

1 day ago

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விமரிசையாக கொண்டாட்டம்

1 day ago

தூத்துக்குடியில் பரபரப்பு சட்டவிரோத மது விற்பனை குறித்து புகார்: காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல் வாலிபரை போலீசார் வலைவீசி தேடல் – காங்கிரஸ் கட்சியினர் கண்டனம்

2 days ago

அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை: அதிகாரத்தை பயன்படுத்தி திமுக குரலை ஒடுக்க முடியாது – கனிமொழி

2 days ago

பள்ளி மாணவர்களுக்கு கட்சித் துண்டா? மாணவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்

4 days ago

புதிய பேருந்து நிலையம் ஸ்ரீ போத்தி விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்ட அன்னதானத்தை கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்

5 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்