Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

100 நாள் வேலை திட்ட பெண்களை அலுவலக கோப்புகளை தூக்க பயன்படுத்துவதா? பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

Admin 7 hours ago தூத்துக்குடி
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதார பாதுகாப்பையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட முக்கியமான திட்டமாகும் - சித்ராங்கதன்
தூத்துக்குடி, செப்.21-

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில், கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பெண் பணியாளர்களை அழைத்து வந்து, அலுவலக கோப்புகளை கீழ்தளத்தில் இருந்து மாடிக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் பணியாளர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுவதாவது: மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட தங்களிடம், கீழ்தளத்தில் இருந்த அலுவலக கோப்புகள் மற்றும் ஆவணங்களை மாடிக்கு எடுத்துச் செல்லுமாறு கூறப்பட்டதாகவும், அந்தப் பணியை முடித்துவிட்டு சென்றால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாங்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்ததாக பதிவேட்டில் பதிவு செய்து கொள்வதாகவும் கூறப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கூறியதாவது:

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதார பாதுகாப்பையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாருதல், நீர்வளப் பாதுகாப்பு, நில மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட ஊரக வளர்ச்சிக்கு பயனளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அலுவலக கோப்புகளை ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திற்கு தூக்கிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட பணியை செய்ததாக பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு, அதற்கு தொடர்பில்லாத வேறு பணியை தொழிலாளர்களிடம் மேற்கொள்ளச் செய்வது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை கண்காணித்து, அவர்கள் உரிய பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அதிகாரிகளே மாற்றுப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்.

இந்த புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் பணியாளர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அன்றைய தினம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி என்ன, பணிப்பதிவேட்டில் என்ன பணி குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மையில் அவர்கள் எந்தப் பணியை மேற்கொண்டனர் என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

100 நாள் வேலை திட்டம் என்பது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் பாதுகாப்பதற்கான திட்டமே தவிர, அரசு அலுவலகங்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கான திட்டம் அல்ல. எனவே, திட்டத்தின் நோக்கத்தையும் விதிமுறைகளையும் அதிகாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

இரட்டைமலை சீனிவாசனார் 81-வது நினைவு தினம் தூத்துக்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

3 days ago

த லீடர் இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜன் நியமனம் அண்ணாமலை அறிவிப்பு

3 days ago

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விமரிசையாக கொண்டாட்டம்

3 days ago

தூத்துக்குடியில் பரபரப்பு சட்டவிரோத மது விற்பனை குறித்து புகார்: காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல் வாலிபரை போலீசார் வலைவீசி தேடல் – காங்கிரஸ் கட்சியினர் கண்டனம்

4 days ago

அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை: அதிகாரத்தை பயன்படுத்தி திமுக குரலை ஒடுக்க முடியாது – கனிமொழி

4 days ago

பள்ளி மாணவர்களுக்கு கட்சித் துண்டா? மாணவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்