Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது பெண் மாவட்ட ஆட்சியர் புகார்? – “Inappropriate Advances, Unwarranted Messages” குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை! – அண்ணாமலை வலியுறுத்தல்

Admin 1 day ago தூத்துக்குடி
தமிழகம் இதுவரை கண்டிராத வகையிலான இந்த விவகாரம், அரசு நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது - அண்ணாமலை
சென்னை, நவ.24-

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் முறையற்ற அணுகுமுறைகள் (Inappropriate Advances), தேவையற்ற குறுஞ்செய்திகள் (Unwarranted Messages) தொடர்பான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தி இந்து (The Hindu) நாளிதழில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கருத்தில், மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் இதுவரை கண்டிராத வகையிலான இந்த விவகாரம், அரசு நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கண்ணியம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் அணுகப்பட வேண்டும். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, எவ்வித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, புகார் அளித்துள்ள பெண் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பையும், அவரது பணிசார்ந்த சுதந்திரத்தையும் உறுதி செய்வதுடன், விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசின் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையா? இந்த விவகாரத்தில் தமிழக அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

– அண்ணாமலை, தலைவர், வீ த லீடர் இயக்கம்.


மேலும் செய்திகள்

மில்லர்புரத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்த தனியார் நிறுவனம் பூட்டி சீல் வைப்பு! – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

3 hours ago

புகாரளிக்க வந்தவரையே சித்திரவதை செய்து கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடுகிறதா தவெக அரசு? – பாலகிருஷ்ணன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

4 hours ago

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு கண்டன ஆர்ப்பாட்டம்! – நீதித்துறையின் மாண்பைக் காக்க வலியுறுத்தி முழக்கம்

4 hours ago

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தவெக அரசு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டது – முதல்வர் விஜய்யைச் சுற்றி மாயக்கோட்டை கட்டப்பட்டுள்ளதாக வீ த லீடர் இயக்கத் தலைவர் விமர்சனம்

1 day ago

தூத்துக்குடியில் உப்பளங்களை அழிக்க எதிர்ப்பு; ஜான் பாண்டியனிடம் ஆதரவு கோரிய உற்பத்தியாளர்கள்

1 day ago

தவெக நிர்வாகி டாக்டர் டைகர் சிவாவின் தந்தை சுப்பையா (எ) முருகன் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்!

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்