Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தவெக அரசு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டது – முதல்வர் விஜய்யைச் சுற்றி மாயக்கோட்டை கட்டப்பட்டுள்ளதாக வீ த லீடர் இயக்கத் தலைவர் விமர்சனம்

Admin 1 day ago தூத்துக்குடி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாகக் கருதி, தவெக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுள்ளது - அண்ணாமலை
சென்னை, நவ.24:

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தவெக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுள்ளதாகவும், இதன் விளைவுகள் விபரீதமாக அமையக்கூடும் என்றும் வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பவர் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர். ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களாக நீதிமன்றங்கள் விளங்குகின்றன. நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளை ஓர் அரசாங்கம் தனது விருப்பு, வெறுப்புகளுக்கு உட்படுத்தாமல், அவற்றை நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் செயல்படுத்தும்போதுதான் சமூகத்தில் நீதியும் சமநிலையும் நிலைநாட்டப்படும்.

ஆனால், தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாகக் கருதி, தவெக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுள்ளது. இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானதாக அமையக்கூடும் என்பதை ஒரு சாமானியக் குடிமகனாகவே தன்னால் தெளிவாக உணர முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இந்த ஆபத்து ஏன் புரியவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதாகவும், அவரைச் சுற்றி ஒரு மாயக்கோட்டையை உருவாக்கி வைத்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

அந்த மாயக்கோட்டையை உடைத்து, உண்மை நிலவரத்தை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் ஏற்படும் அரசியல் பாதிப்புகளும் நஷ்டங்களும் இறுதியில் முதலமைச்சர் விஜய்க்குத்தான் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அரசியல் காரணங்கள், அறியாமை அல்லது கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் என எத்தகைய காரணங்களைக் கூறினாலும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆட்சி நடத்துவோம் என்று உறுதியேற்ற தவெக அரசு, திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அழிக்க முடியாத வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டதாக அவர் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

இவ்வாறு வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்

மில்லர்புரத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்த தனியார் நிறுவனம் பூட்டி சீல் வைப்பு! – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

3 hours ago

புகாரளிக்க வந்தவரையே சித்திரவதை செய்து கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடுகிறதா தவெக அரசு? – பாலகிருஷ்ணன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

4 hours ago

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு கண்டன ஆர்ப்பாட்டம்! – நீதித்துறையின் மாண்பைக் காக்க வலியுறுத்தி முழக்கம்

4 hours ago

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது பெண் மாவட்ட ஆட்சியர் புகார்? – “Inappropriate Advances, Unwarranted Messages” குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை! – அண்ணாமலை வலியுறுத்தல்

1 day ago

தூத்துக்குடியில் உப்பளங்களை அழிக்க எதிர்ப்பு; ஜான் பாண்டியனிடம் ஆதரவு கோரிய உற்பத்தியாளர்கள்

1 day ago

தவெக நிர்வாகி டாக்டர் டைகர் சிவாவின் தந்தை சுப்பையா (எ) முருகன் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்!

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்