Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் உப்பளங்களை அழிக்க எதிர்ப்பு; ஜான் பாண்டியனிடம் ஆதரவு கோரிய உற்பத்தியாளர்கள்

Admin 1 day ago தூத்துக்குடி
ஜான் பாண்டியனை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டிய உப்பு உற்பத்தியாளர்கள் – உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தல்!
தூத்துக்குடி, நவ.24:

தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல தலைமுறைகளாக உப்பு உற்பத்தித் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான உப்பு உற்பத்தியைப் பாதுகாக்க வேண்டும் என்றும், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு உப்பளங்கள் இல்லாத மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள், எதிர்ப்புக் கூட்டங்கள் மற்றும் கிராம அளவிலான ஆலோசனைகளை நடத்தி வரும் உப்பு உற்பத்தியாளர்கள், தங்களது கோரிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவைத் திரட்டி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை அவரது இல்லத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் நேரில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது உப்பு உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ், சண்முகவேல், சுயம்பு நாடார், பொன்ராஜ், பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, உப்பளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் குறித்தும், கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

மேலும், உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், தங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஜான் பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர்.

உப்பளங்களைப் பாதுகாப்பதா? கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்துவதா? என்ற கேள்வி தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

மில்லர்புரத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்த தனியார் நிறுவனம் பூட்டி சீல் வைப்பு! – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

3 hours ago

புகாரளிக்க வந்தவரையே சித்திரவதை செய்து கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடுகிறதா தவெக அரசு? – பாலகிருஷ்ணன் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

4 hours ago

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு கண்டன ஆர்ப்பாட்டம்! – நீதித்துறையின் மாண்பைக் காக்க வலியுறுத்தி முழக்கம்

4 hours ago

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தவெக அரசு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டது – முதல்வர் விஜய்யைச் சுற்றி மாயக்கோட்டை கட்டப்பட்டுள்ளதாக வீ த லீடர் இயக்கத் தலைவர் விமர்சனம்

1 day ago

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது பெண் மாவட்ட ஆட்சியர் புகார்? – “Inappropriate Advances, Unwarranted Messages” குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை! – அண்ணாமலை வலியுறுத்தல்

1 day ago

தவெக நிர்வாகி டாக்டர் டைகர் சிவாவின் தந்தை சுப்பையா (எ) முருகன் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்!

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்