Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - அதிகாரிகளைத் தொலைபேசியில் அழைத்து உத்தரவிட்ட அரசியல் புள்ளிகள் யார்? – தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Admin 22 hours ago தூத்துக்குடி
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல், குறுஞ்செய்தி விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு!
மதுரை: நவ 28

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசின் அதிகாரிகள் அரசியல் மேலிடத்தின் உத்தரவுகளின்படி செயல்பட்டார்களா என்ற முக்கியமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் நடைபெற்ற சம்பவங்களின் தொடரைப் பார்க்கும்போது, நிர்வாக அதிகாரிகள் அரசியல் மேலிடத்தின் உத்தரவுகளின்படி செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பதற்கும், நீதித்துறை நிர்வாகத்தின் தூய்மையைப் பாதுகாப்பதற்கும் இது அவசியம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தீபம் ஏற்றுவதற்கு முந்தைய காலகட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், அதிகாரிகள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள், அவர்களுக்கிடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கால் டீடெய்ல் ரெக்கார்டுகளுடன் (Call Detail Records) தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதுடன், தலைமைச் செயலர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

தீபம் ஏற்றும் விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பின்னால் இருந்து உத்தரவிட்ட அரசியல் புள்ளிகள் யார்? யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் செயல்பட்டனர்? என்பது குறித்த உண்மைகள் விசாரணையில் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

ஹவுசிங் போர்டு காலனி நுழைவுவாயிலில் தேங்கிய மழைநீர் அதிரடியாக வெளியேற்றம் – மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கவுன்சிலர் ரெங்கசாமி மற்றும் பொதுமக்கள் நன்றி!

13 hours ago

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மகா தீபம் ஏற்றம்! – நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் முன்னிலையில் விண்ணைப் பிளந்த வெற்றிவேல் வீரவேல் முழக்கம்!

14 hours ago

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

19 hours ago

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும்! – தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

1 day ago

தூத்துக்குடி சிவன் கோயில் தேரைச் சுற்றி டிஜிட்டல் பேனர்கள்! – அகற்றாவிட்டால் நாளை இந்து முன்னணி போராட்டம்!!

1 day ago

கடைசியாக ஒருவழியாக கைது நடந்துவிட்டது; வேற்றுக்கிரகவாசிகள் வருவார்கள் என்றுதான் நினைத்தேன்!” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது பற்றி கனிமொழி எம்.பி. கிண்டல்

1 day ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்